Monday, March 2, 2026
No menu items!

குளிர்பான சர்ச்சையைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட்..?? மீண்டும் விளம்பரத்தில் நடிக்கும் அஜித்..!!

சினிமா மட்டுமின்றி பைக் ரைடிங், கார் ரேஸிங், துப்பாக்கிச் சுடுதல் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் அஜித் குமார். சமீபகாலமாக கார் பந்தயங்களில் தீவிர கவனம் செலுத்தி வரும் இவர், இதற்காகவே ‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். மலேசியாவைத் தொடர்ந்து துபாயில் நடைபெறவுள்ள போட்டிகளிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

இதற்கிடையில், சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் குளிர்பான விளம்பரத்தில் அஜித் நடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு நடிகர்கள் விளம்பரம் செய்யலாமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர். இந்த சர்ச்சை அடங்குவதற்குள், அஜித் தற்போது ‘நோவா ரியல் எஸ்டேட்’ (Nova Real Estate) நிறுவனத்தின் விளம்பரப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘விடாமுயற்சி’ பட ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. கார் பந்தயங்களில் கலந்து கொள்ள ஒரு சீசனுக்கு ரூ.25 முதல் 45 கோடி வரை செலவாகும் என்பதால், அந்தச் செலவை ஈடுகட்டவும், ஸ்பான்சர்களுக்காகவுமே அஜித் தொடர்ந்து விளம்பரங்களில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News