Home சினிமா தளபதி விஜய்யின் முதல் நாயகி சங்கவி இப்போது எங்கே இருக்கிறார்.? வைரலாகும் குடும்பப் புகைப்படங்கள்.!!!

தளபதி விஜய்யின் முதல் நாயகி சங்கவி இப்போது எங்கே இருக்கிறார்.? வைரலாகும் குடும்பப் புகைப்படங்கள்.!!!

அஜித், விஜய், ரஜினிகாந்த் எனத் தமிழின் உச்ச நட்சத்திரங்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்த சங்கவி, தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்தார். குறிப்பாக விஜய்யுடன் இவர் நடித்த

பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தவை. ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு நகர்ந்தவர், அங்கேயும் ‘கோகுலத்தில் சீதை’ போன்ற தொடர்கள் மூலம் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த நாயகியாக மாறினார்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு, கடந்த 2016-ம் ஆண்டு வெங்கடேஷ் என்ற தொழில்திபரைத் திருமணம் செய்து கொண்டு பெங்களூருவில் குடியேறினார். திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த சங்கவிக்கு, 42 வயதில் ‘சாய் பிரசன்னா’ என்ற அழகான

பெண் குழந்தை பிறந்தது. தற்போது தனது கணவர் மற்றும் மகளுடன் நேரத்தைச் செலவிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வரும் சங்கவி, சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது குடும்பப் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் வெளியிடும் புகைப்படங்களைப் பார்க்கும் ரசிகர்கள்,

“இன்றும் அதே அழகுடன் ஜொலிக்கிறாரே!” என வியந்து கமெண்ட் செய்து வருகின்றனர். சினிமாவை விட தனது குடும்பமே உலகம் என மகிழ்ச்சியான இல்லத்தரசியாக தனது இரண்டாவது இன்னிங்ஸை சங்கவி சிறப்பாக நடத்தி வருகிறார்…

Exit mobile version