தமிழக சட்டசபையில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் கடந்த கால சவால்கள் குறித்துப் பேசினார்.அப்போது அவர், “திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது இருந்த சூழல் சாதாரணமானது அல்ல; அது ஒரு ‘இடியாப்பச் சிக்கல்’ போன்ற நெருக்கடியான நிலை” என்று குறிப்பிட்டார்.
அத்தகைய கடுமையான சூழலிலும் திறம்படச் செயல்பட்டுப் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியதாக அவர் தெரிவித்தார்.மேலும், வரவிருக்கும் காலக்கட்டத்தை ‘திமுக 2.0’ என்று குறிப்பிட்ட முதல்வர், இந்த புதிய அத்தியாயம் எப்படி இருக்கும் என்பதையும் விளக்கினார்.
“எங்களின் முந்தைய சாதனைகளையே மிஞ்சும் அளவுக்கு, இந்த திமுக 2.0 ஆட்சி மிகச் சிறப்பாகவும், வேகம் நிறைந்ததாகவும் இருக்கும்” என்று சட்டசபையில் அவர் உறுதிபடத் தெரிவித்தார். முதல்வரின் இந்த ‘2.0’ அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது…

