Monday, March 2, 2026
No menu items!

நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவரா..?? 30 வயதில் வரும் மூட்டு வலியைத் தடுப்பது எப்படி..??

இன்றைய நவீன உலகில் 30 வயதைத் தொடும்போதே பலரும் மூட்டு வலி மற்றும் அசௌகரியங்களால் அவதிப்படுகின்றனர். இதற்கு மிக முக்கிய காரணம், நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதுதான். இதனால் இடுப்பு மற்றும் தொடைப்பகுதி தசைகள் வலிமை இழந்து, மூட்டுகளுக்குத் தேவையான பலம் குறைவதால் திடீரென வேலை செய்யும்போது வலி ஏற்படுகிறது.

இதனைச் சரிசெய்ய வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த பால், முட்டை, கீரை வகைகள் மற்றும் சூரிய வெளிச்சம் அவசியம். இவை ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கும். மேலும், மீன், ஆளி விதைகள், வால்நட் ஆகியவற்றில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூட்டு வீக்கத்தையும், இறுக்கத்தையும் குறைக்கும். மஞ்சள், இஞ்சி, கிரீன் டீ போன்றவையும் வீக்கத்தைக் குறைக்க உதவும்.

உடல் எடையைக் குறைப்பது மற்றும் சீரான உடற்பயிற்சி மூலமே மூட்டுப் பிரச்சனைகளிலிருந்து விடுபட முடியும். வலி மிகத் தீவிரமாகி, ஓய்வு நேரத்திலும் வலி இருந்தாலோ அல்லது நடக்கவே சிரமப்படும் நிலை ஏற்பட்டாலோ மட்டுமே மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News