Home வானிலை மஞ்சள் அலர்ட்..!! உங்கள் மாவட்டத்தில் மழை பெய்யுமா..??

மஞ்சள் அலர்ட்..!! உங்கள் மாவட்டத்தில் மழை பெய்யுமா..??

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, நாளை (ஜனவரி 25) பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனையொட்டி, 9 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’ (Yellow Alert) விடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கடலூர், தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் விவசாயிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.திடீரென அறிவிக்கப்பட்டுள்ள இந்த மஞ்சள் அலர்ட் காரணமாக, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

ஜனவரி மாத இறுதியில் பெய்யும் இந்த எதிர்பாராத மழை, டெல்டா மாவட்ட விவசாயப் பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது…

Exit mobile version