சென்னை சட்டசபை வளாகத்தில் இன்று சபாநாயகர் அப்பாவு அறையில் நிகழ்ந்த ஒரு சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் (ஓபிஎஸ்) நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர்.எதிரெதிர் அரசியல் துருவங்களாகக் கருதப்படும் இருவரும் சந்தித்துக் கொண்டது, கூட்டணி மாற்றம் அல்லது முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்த விவாதமாக இருக்குமோ எனப் பலரும் ஊகிக்கத் தொடங்கினர்.
சபாநாயகர் அறையில் நடந்த இந்தச் சந்திப்பு ஊடகங்களில் முக்கியச் செய்தியாக இடம்பிடித்தது.இருப்பினும், இந்தச் சந்திப்பு குறித்துப் பரவிய வதந்திகளுக்கு அமைச்சர் சேகர் பாபு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்தார். “நாங்கள் நேரில் சந்தித்தது உண்மைதான்,
ஆனால் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை,” என்று அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என்று கூறப்பட்டாலும், அரசியல் களத்தில் இந்தச் சந்திப்பு குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன…
