Monday, March 2, 2026
No menu items!

பராசக்தி vs வா வாத்தியார் vs TTT – பொங்கல் ரேஸில் ஜெயித்தது இந்தப் படம் தான்..??

2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் தமிழ் சினிமாவில் மும்முனைப் போட்டி நிலவியது. சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’, ‘வா வாத்தியார்’ மற்றும் ‘தலைவர் தம்பி தலைமையில்’ (TTT) ஆகிய படங்கள் திரையரங்குகளில் மோதின. இதில் சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படத்திற்கு விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்ததாகப் படக்குழு அறிவித்திருந்தது. அதேபோல், ‘வா வாத்தியார்’ படத்திற்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்தன.

ஆனால், இவற்றுக்கு மத்தியில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்திற்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் மற்றும் குடும்பங்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. விமர்சன ரீதியாகவும் இப்படம் பெரும் பாராட்டைப் பெற்றது. இந்நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பந்தயத்தில் வென்றது யார் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

வசூல் மற்றும் மக்கள் வரவேற்பு அடிப்படையில், மற்ற இரண்டு படங்களையும் பின்னுக்குத் தள்ளி ‘தலைவர் தம்பி தலைமையில்’ படமே ‘2026 பொங்கல் வின்னர்’ (Pongal Winner) எனப் பிரபல விநியோகஸ்தர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News