தமிழகத்தில் ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இந்த ஆண்டிற்கான (2026) ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி, நடப்பாண்டில் இரண்டு முறை டெட் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. முதல் தேர்விற்கான அறிவிப்பு வரும் மே மாதத்தில் வெளியிடப்படும் என்றும்,
அதற்கான தேர்வு ஜூலை மாதத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, இரண்டாவது தேர்விற்கான அறிவிப்பு அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்டு, தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஒரே ஆண்டில் இரண்டு வாய்ப்புகள் கிடைத்துள்ளதால், ஆசிரியர் பணிக்குத் தயாராகி வரும் தேர்வர்கள் உற்சாகமடைந்துள்ளனர். முறையான திட்டமிடலுடன் படித்தால் இந்த ஆண்டே அரசுப் பணியில் சேரும் கனவை நனவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது…
