Monday, March 2, 2026
No menu items!

தூக்கத்தில் பள்ளத்தில் விழுவது போல் கனவு வருகிறதா..?? இதற்குப் பெயர் தான் ‘ஹிப்னிக் ஜெர்க்’..!!

தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது திடீரென மாடியில் இருந்தோ அல்லது பள்ளத்திலோ விழுவது போன்ற உணர்வு ஏற்பட்டு, உடல் சட்டென அதிர்ந்து விழித்துக்கொள்வோம். மருத்துவ உலகில் இதனை ‘ஹிப்னிக் ஜெர்க்’ (Hypnic Jerk) என்று அழைக்கின்றனர்.விழித்திருக்கும் நிலைக்கும், ஆழ்ந்த தூக்கத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில்தான் இது பெரும்பாலும் நிகழ்கிறது. நாள் முழுவதும் வேலை செய்து இறுகிப்போன தசைகளைத் தளர்வடையச் செய்ய, மூளை இத்தகைய ‘விழுவது போன்ற’ மாயத் தோற்றத்தை உருவாக்குகிறது.

இதனால் உடல் ஒருமுறை அதிர்ந்து (Jerk), பின் முழுமையாகத் தளர்வடைகிறது.நமது மூதாதையர்கள் மரத்தில் தூங்கும்போது, பாதுகாப்பாக இருக்கிறோமா என்பதை உறுதிப்படுத்த மூளை செய்யும் சோதனையாகவும் இது இருக்கலாம் என சில ஆய்வுகள் சுவாரஸ்ய தகவலைக் கூறுகின்றன.

அதேவேளையில், அதிகப்படியான உடல் சோர்வு, வசதியில்லாத நிலையில் படுப்பது, அதிக மன அழுத்தம் மற்றும் பதற்றம் (Anxiety) உள்ளவர்களுக்கே இந்த ‘ஹிப்னிக் ஜெர்க்’ அடிக்கடி ஏற்படும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News