Monday, March 2, 2026
No menu items!

காயத்திலிருந்து மீண்டும் அணியில் இடமில்லை- திலக் வர்மாவுக்கு பதில் தொடரும் வீரர் யார்.??

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில், இந்திய அணியின் இளம் நட்சத்திரம் திலக் வர்மா பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.காயத்தினால் அவதிப்பட்டு வந்த திலக் வர்மா, தற்போது அதிலிருந்து முழுமையாகக் குணமடைந்து விட்டார். இருப்பினும், நியூசிலாந்துக்கு எதிராக மீதமுள்ள இரண்டு டி20 போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் அணிக்குத் திரும்புவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், பிசிசிஐ-யின் இந்த அறிவிப்பு அவர்களுக்குச் சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது. அவருக்குப் பதிலாக மாற்று வீரராக அறிவிக்கப்பட்டிருந்த ஸ்ரேயஸ் ஐயரே தொடர்ந்து அணியில் நீடிப்பார் என்று பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஸ்ரேயஸ் ஐயருக்குத் தன்னை நிரூபிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News