Monday, March 2, 2026
No menu items!

14,000 பேர் பணிநீக்கம் ..!!! அமேசான் நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!!

சர்வதேச மின்வணிகத் துறையில் ஜாம்பவானாகத் திகழும் அமேசான் நிறுவனம், தொழில்நுட்ப உலகையே அதிர வைக்கும் வகையிலான முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கையின் (Restructuring) ஒரு பகுதியாக, சுமார் 14,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.இந்தத் திடீர் பணிநீக்க நடவடிக்கையால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் பாதிக்கப்பட உள்ளனர்.

குறிப்பாக, வணிகம் (Commerce), ப்ரைம் வீடியோ (Prime Video) மற்றும் மனிதவளத்துறை (HR) ஆகிய பிரிவுகளில் பணிபுரிபவர்களே அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.பொருளாதார நெருக்கடி மற்றும் நிறுவனத்தின் எதிர்காலச் செயல்பாடுகளை முறைப்படுத்துவதற்காகவே ,

இந்த கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே பல முன்னணி ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், அமேசானின் இந்த அறிவிப்பு ஊழியர்களிடையே பெரும் அச்சத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News