Monday, March 2, 2026
No menu items!

விஜய் ஒரு கதாநாயகன்.. பில்டப் தான் கொடுப்பார் – அதிமுக மாஜி அமைச்சர் நக்கல்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அண்மையில் ஒவ்வொரு வீட்டிலும் தனக்கு வாக்கு வங்கி இருப்பதாகப் பேசியது அரசியல் களத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விஜய்யின் இந்தப் பேச்சை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.இன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, “விஜய் சொல்வதெல்லாம் சும்மா பில்டப் தான். அவர் ஒரு சினிமா கதாநாயகன் என்பதால், இயல்பாகவே பில்டப் தான் கொடுப்பார்,” என்று கிண்டலடித்தார்.

மேலும் விஜய்யின் வாக்கு வங்கி கணிப்பைக் கேள்விக்குள்ளாக்கிய அவர், “எந்த அடிப்படையில் ஒவ்வொரு வீட்டிலும் ஓட்டு இருப்பதாகச் சொல்கிறார்? அவர் என்ன ஒவ்வொரு வீடாகச் சென்று சென்சஸ் (கணக்கெடுப்பு) நடத்தினாரா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். கள எதார்த்தம் தெரியாமல் விஜய் பேசுவதாகச் செல்லூர் ராஜு கூறிய கருத்து, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News