Monday, March 2, 2026
No menu items!

விஜய் தனியாக நின்றால் ஜீரோ தான்.. தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி கருத்து..!!

தமிழக அரசியலில் புதிய வரவாக இணைந்துள்ள நடிகர் விஜய் குறித்து, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசுகையில் ஒரு கணித உதாரணத்தை முன்வைத்தார்.

அவர் பேசுகையில், “தம்பி விஜய் அரசியலில் தனியாக நின்றால் அவர் ‘ஜீரோ’ (பூஜ்யம்) தான். கணித ரீதியாக பூஜ்ஜியத்திற்குத் தனியாக இருக்கும்போது மதிப்பில்லை. அதுவே இன்னொரு எண்ணோடு சேரும்போதுதான் அதற்கு மதிப்பு கிடைக்கிறது. அதேபோல்தான் அரசியலில் விஜய்யின் நிலையும் அமையும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி விஜய் களம் இறங்கியுள்ள நிலையில், தமிழிசை சௌந்தரராஜனின் இந்த ‘கூட்டணி’ குறித்த மறைமுகக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News