Home ஆன்மீகம் 27 ஜனவரி 2026 ராசி பலன் – இன்று இரண்டு ராசிகளுக்கு சந்திராஷ்டமம்.!!

27 ஜனவரி 2026 ராசி பலன் – இன்று இரண்டு ராசிகளுக்கு சந்திராஷ்டமம்.!!

  1. மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு நன்றாகத் தொடங்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு இலக்குகளை அடைவீர்கள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நிதி நிலைமையில் சிறு ஏற்றத்தாழ்வுகள் வரலாம் என்பதால் கவனம் தேவை.

  2. ரிஷபம் : அரசியல்வாதிகளுக்கு அனுகூலம் கிடைக்கும். முடங்கிக் கிடந்த தொழில் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாளாகும்.

  3. மிதுனம் : துன்பங்கள் விலகி ஓடும். இல்லம் தேடி நல்ல செய்திகள் வரும். வீடு அல்லது சொத்து வாங்கும் முயற்சிகள் கைகூடும். திடீர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.

  4. கடகம் : உங்கள் இலக்குகளை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் வழியில் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட இது உகந்த நேரம்.

  5. சிம்மம் : காதல் உறவுகள் மகிழ்ச்சியாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளைத் தொடங்கலாம்.

  6. கன்னி : (கவனம் தேவை): இன்று சந்திராஷ்டமம் உள்ளதால் மனதில் இனம் புரியாத கவலைகள் அல்லது மன அழுத்தம் ஏற்படலாம். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளை ஒத்திவைக்கவும்.

  7. துலாம் : பகல் பொழுது மகிழ்ச்சியாகச் செல்லும். ஆனால், மாலை 4:45 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் தொடங்குவதால், மாலையில் மன உளைச்சல் ஏற்படலாம். வெளியூர் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பணவரவு தாமதமாகும்.

  8. விருச்சிகம் : தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும், அது நன்மையைத் தரும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். உடல் நலத்தில் அக்கறை தேவை.

  9. தனுசு : எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு. திருமணப் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

  10. மகரம் : பொருளாதாரத்தில் சற்று நெருக்கடிகள் ஏற்படலாம். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளது. உறவினர்கள் வருகையால் சுபச் செலவுகள் ஏற்படும். தொழிலில் அதிக கவனம் தேவை.

  11. கும்பம் : வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியடையும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. நீண்ட நாள் நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

  12. மீனம் : கடினமான பணிகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். வேலையில் மனத் திருப்தி உண்டாகும். இருப்பினும், மற்றவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி வாக்குறுதி அளிக்க வேண்டாம், எச்சரிக்கை தேவை…

Exit mobile version