நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதில் மீண்டும் பெரும் சட்டச் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இப்படத்திற்குத் தணிக்கை சான்று (Censor Certificate) வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற அமர்வு (Bench), தனிநீதிபதியின் அந்த உத்தரவை ரத்து செய்து இன்று பரபரப்புத் தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்றத்தின் இந்தத் திடீர் தடையால், திட்டமிட்டபடி படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது. தணிக்கை சான்று கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், படத்தின் வெளியீட்டுத் தேதி மேலும் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது.
அரசியல் களத்தில் விஜய் தீவிரமாக இயங்கி வரும் நிலையில், அவரது படத்திற்குத் தொடர்ந்து நெருக்கடிகள் அதிகரித்து வருவது படக்குழுவினரையும், ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. சட்டப் போராட்டத்திற்குப் பிறகே படம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது…
