Home செய்திகள் ரூ.25 லட்சம் கடன் – தமிழக அரசின் புதிய திட்டம் ..!! ரேஷன் கார்டு இருந்தா...

ரூ.25 லட்சம் கடன் – தமிழக அரசின் புதிய திட்டம் ..!! ரேஷன் கார்டு இருந்தா போதும் ..!!

தமிழகத்தில் சுயதொழில் தொடங்க விரும்பும் பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) மற்றும் சீர்மரபினர் (DNC) வகுப்பினருக்குப் பொருளாதார ரீதியாக உதவத் தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEEDCO) மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், தகுதியுள்ள நபர்களுக்கு ரூ.25 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

விண்ணப்பதாரர் 18 முதல் 60 வயதுக்குட்பட்டவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். ரேஷன் கார்டு, சாதிச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்று ஆகியவை அடிப்படை ஆவணங்களாகும். தனிநபர் தொழில் தொடங்க மட்டுமல்லாமல், சுய உதவிக் குழுக்களுக்கும் குறைந்த வட்டி விகிதத்தில் (7% – 8%) இக்கடன் வழங்கப்படுகிறது.

மேலும், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு இரண்டு கறவை மாடுகள் வாங்க ரூ.1.20 லட்சம் வரை கடன் பெறலாம். சிறு வணிகம், விவசாயம் மற்றும் பாரம்பரிய தொழில்களை ஊக்குவிக்கும் இந்தத் திட்டத்தில், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் TABCEEDCO இணையதளம் அல்லது மாவட்ட அலுவலகத்தை அணுகலாம்…

Exit mobile version