Monday, March 2, 2026
No menu items!

அடர்த்தியான முடி வளர எளிய பாட்டி வைத்தியம் – வெங்காயச் சாற்றின் அற்புத பயன்கள்..!!

இன்றைய மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தால், ஆண், பெண் பேதமின்றி அனைவரும் சந்திக்கும் முக்கியப் பிரச்சனை முடி உதிர்தல் ஆகும். பொடுகுத் தொல்லை, வழுக்கை, நரைமுடி மற்றும் வலுவிழந்த கூந்தல் போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு தேடி மக்கள் அலைகின்றனர். ஆனால், நம் வீட்டிலிருக்கும் வெங்காயத்தை வைத்தே இதற்கு எளிய தீர்வு காண முடியும் என அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக, 3 ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அரைத்து அதனுடன் ஒரு கப் வெங்காயச் சாற்றைக் கலந்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்துக் குளித்தால், முடி வேரிலிருந்து வலுபெறும்.அதேபோல், இரண்டு உருளைக்கிழங்கை அரைத்து எடுத்த சாற்றுடன்,

ஒரு கப் வெங்காயச் சாற்றைக் கலந்து உச்சந்தலையில் 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் 30 நிமிடங்கள் ஊறவைத்துக் குளிப்பதும் நல்ல பலனைத் தரும். இந்த இரண்டு இயற்கை வழிமுறைகளையும் வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், முடி உதிர்வது நின்று, கூந்தல் ஆரோக்கியமாக வளரும் என்று பரிந்துரைக்கப்படுகிறது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News