கடந்த 2020-ம் ஆண்டு வெளியான ‘திரௌபதி’ படத்தின் மூலம் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குநர் மோகன் ஜி. தொடர்ந்து ‘ருத்ர தாண்டவம்’, ‘பகாசுரன்’ ஆகிய நல்ல படங்களை இயக்கிய இவர், தற்போது பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘திரௌபதி 2’ படத்தை வெளியிட்டார்.வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட கதைக்களத்துடன் உருவான இப்படம்,
ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யத் தவறியதாகக் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்குக் கிடைக்காததால், வசூல் ரீதியாகப் படம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.வெளியாகி 4 நாட்கள் கடந்த நிலையில்,
உலகளவில் இப்படம் வெறும் ரூ. 2.2 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்பார்த்த வசூல் இல்லாததால், இப்படம் வர்த்தக ரீதியாக ஒரு ‘டிசாஸ்டர்’ (Disaster) ஆக மாறிவிட்டதாகத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன…

