Home செய்திகள் ஐபோன் பயனர்களுக்கு எச்சரிக்கை..!! குரோம் பயன்படுத்த வேண்டாம் – ஆப்பிள் சொன்ன பகீர் காரணம்..!!

ஐபோன் பயனர்களுக்கு எச்சரிக்கை..!! குரோம் பயன்படுத்த வேண்டாம் – ஆப்பிள் சொன்ன பகீர் காரணம்..!!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் (iPhone) மற்றும் மேக் (Mac) கணினிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு முக்கிய அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, ஆப்பிள் பயனர்கள் கூகுள் குரோம் (Google Chrome) செயலியைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.குறிப்பாக, அப்டேட் செய்யப்படாத மற்றும் ஆதரவு வழங்கப்படாத (Unsupported) பழைய குரோம் வெர்ஷன்களைப் பயன்படுத்துவதால்,

பல்வேறு பாதுகாப்பு அபாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆப்பிள் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆச்சரியமளிக்கும் விதமாக, கூகுள் நிறுவனமே ஆப்பிள் பயனர்களைத் தங்களது குரோம் செயலியைப் பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்துள்ளது நிலைமையின் தீவிரத்தைக் காட்டுகிறது.

பயனர்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்கவும், சைபர் தாக்குதல்களைத் தவிர்க்கவும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பயனர்கள் உடனடியாக மாற்று பிரவுசர்களைப் பயன்படுத்தவோ அல்லது பாதுகாப்பை உறுதிப்படுத்தவோ அறிவுறுத்தப்படுகிறார்கள்…

Exit mobile version