மாலையில் கடற்கரைக்கோ அல்லது பூங்காவிற்கோ சென்றால், கையில் வறுத்த வேர்க்கடலை பொட்டலத்துடன் நேரத்தை செலவிடுவது நம்மில் பலருக்கும் பிடித்தமான பழக்கம். ஆனால், பெரியவர்கள் அடிக்கடி கூறுவதுண்டு, “வேர்க்கடலை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்காதே, இருமல் வரும்” என்று.
இது வெறும் மூடநம்பிக்கையா அல்லது இதற்குப் பின்னால் ஏதேனும் அறிவியல் காரணம் உள்ளதா? மருத்துவ நிபுணர்கள் தரும் விளக்கம் இதோ. எண்ணெய் பிசுக்கும் தண்ணீரும்: வேர்க்கடலையில் இயற்கையாகவே எண்ணெய் பசை
(Oil content) அதிகம் உள்ளது. பொதுவாக எண்ணெய் பலகாரங்கள் சாப்பிட்ட பிறகு குளிர்ந்த நீர் குடிப்பது தொண்டையில் ஒருவித பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அறிவியல் உண்மை. வேர்க்கடலை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிக்கும்போது, அதில் உள்ள எண்ணெய் பசை தொண்டைக் குழாயில் படிகிறது.
தண்ணீர் மற்றும் எண்ணெய் ஒன்று சேராதது என்பதால், இது தொண்டையில் ஒருவித உறுத்தலை (Irritation) ஏற்படுத்தி, வறட்டு இருமலை உண்டாக்குகிறது. செரிமானப் பிரச்னைகள்: நமது உடலானது உணவைச் செரிப்பதற்காக வெப்பத்தை (Metabolic heat) உற்பத்தி செய்கிறது.
வேர்க்கடலை போன்ற அதிக கலோரி மற்றும் கொழுப்புச் சத்துள்ள உணவைச் சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பது, அந்த வெப்பத்தைத் தணித்து செரிமானத்தை மந்தமாக்குகிறது. இதனால் அஜீரணம் அல்லது வாயுத் தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மூச்சுத் திணறல் அபாயம்: சில சமயங்களில், வேர்க்கடலைத் துகள்கள் உணவுக்குழாயில் இருக்கும்போதே தண்ணீர் குடித்தால், அது தவறுதலாக மூச்சுக்குழாய்க்குள் செல்லும் அபாயம் உள்ளது (Aspiration). இது கடுமையான இருமல் மற்றும் மூச்சுத் திணறலை ஏற்படுத்தக்கூடும். நிபுணர்களின் தீர்வு என்ன?
வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் கழித்தே தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். தாகம் அதிகமாக இருந்தால், ஓரிரு மிடறு வெதுவெதுப்பான நீரை அருந்தலாம். இது தொண்டையில் உள்ள எண்ணெய் பிசுக்கை நீக்க உதவுவதோடு, செரிமானத்திற்கும் வழிவகுக்கும்…

