Monday, March 2, 2026
No menu items!

இலவச AI பயிற்சி வேண்டுமா..?? 10 லட்சம் பேருக்கு வாய்ப்பு – குடியரசுத் தலைவர் முர்மு அறிவிப்பு..!!

தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) புரட்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்திய இளைஞர்களை அதற்குத் தயார்படுத்தும் வகையில் மத்திய அரசு ஒரு மெகா திட்டத்தை முன்னெடுத்துள்ளது.இன்று நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இளைஞர்களுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும் 10 லட்சம் இளைஞர்களுக்கு இலவசமாக செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

எதிர்கால வேலைவாய்ப்புகளில் AI முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால், இந்திய இளைஞர்களின் திறனை மேம்படுத்த இந்தத் திட்டம் உதவும் எனக் கருதப்படுகிறது. அரசின் இந்த அறிவிப்பு கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News