Monday, March 2, 2026
No menu items!

காவல் உதவி ஆய்வாளர் தேர்வு முடிவுகள் – கட்-ஆஃப் என்ன.?? அடுத்தகட்ட தேர்வு தேதி அறிவிப்பு..!!

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 1,299 காவல் உதவி ஆய்வாளர் (SI) பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகளைத் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் நடைபெற்ற இத்தேர்வை எழுத 1.78 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. இதில் சுமார் 30 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின்படி, ஒரு காலிப்பணியிடத்திற்கு 5 பேர் என்ற விகிதத்தில் (1:5), மொத்தம் 7,414 பேர் அடுத்தகட்டமான உடல் தகுதித் தேர்வுக்குத் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதித் தேர்வு வரும் பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கி மார்ச் 2-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடல் தகுதித் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே அடுத்தகட்ட நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தேர்வர்கள் தங்கள் முடிவுகளை இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News