நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் தொடர்பான வழக்கை, தனி நீதிபதி அமர்விலிருந்து திரும்பப் பெற தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும்,குறிப்பிட்ட காட்சிகளை நீக்கக்கோரியது அல்லது சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது தொடர்பான விவகாரத்தில், தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியிருந்தது.
இந்நிலையில், தற்போது அந்த சட்டப் போராட்டத்தைக் கைவிட படக்குழு முடிவு செய்துள்ளது. இது குறித்து வெளியான தகவலின்படி, வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது
அதனை முறையாக வாபஸ் பெறவும், அதன்பின்னர் தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக்குழுவை (Revising Committee) அணுகவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. நீதிமன்ற வழக்கை வாபஸ் பெற்றால் மட்டுமே மறு ஆய்வுக்குழுவிற்குச் செல்ல முடியும் என்பதால் இந்த முடிவை தயாரிப்பு நிறுவனம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது…
