Monday, March 2, 2026
No menu items!

தவெக vs திமுக: அதிமுகவை புறக்கணிக்கச் சொன்ன ஆதவ் அர்ஜுனா.. பின்னணி என்ன.?

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் கூட்டணிகள் குறித்துப் பேசுகையில் அதிரடியான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் தேர்தலில் தவெகவின் போட்டி

ஆளும் திமுகவுடன் மட்டுமே என்றும், அதிமுகவுடன் தொண்டர்கள் சண்டையிட வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது: அதிமுக மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை “அதிமுக மீது மக்களுக்குத் தற்போது நம்பிக்கை இல்லை.

அக்கட்சி எந்தக் கூட்டணி அமைத்தாலும் நமக்கு என்ன கவலை? எனவே, அதிமுகவுடன் மல்லுக்கட்டுவதை விட்டுவிட்டு, நமது முழு கவனத்தையும் ஆளும் திமுகவிற்கு எதிரான போட்டியில் செலுத்த வேண்டும்” என்று ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார். பாஜகவின் ‘பி’ டீம் யார்?

மேலும், தவெகவை பாஜகவின் ‘பி’ டீம் (B-Team) என்று திமுகவினர் விமர்சித்து வருவதற்குப் பதிலடி கொடுத்த அவர், “எங்களை பாஜகவின் ‘பி’ டீம் என்று கூறுகின்றனர். ஆனால், உண்மையில் பாஜகவின் ‘பி’

டீமாகச் செயல்படுவது திமுகதான்,” என்று குற்றம் சாட்டினார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுகவை மட்டுமே பிரதான எதிரியாகக் கருதி தவெக செயல்படும் என்பதை ஆதவ் அர்ஜுனாவின் இந்தப் பேச்சு உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News