Monday, March 2, 2026
No menu items!

தைப்பூசத்தை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள்.. முழு விவரம் இதோ..!!

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காகத் தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

புகழ்பெற்ற முருகன் திருத்தலங்களில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதனால் பக்தர்கள் மற்றும் பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, பயணிகளின் வசதிக்காகப் போக்குவரத்துத் துறை சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அதன்படி நாளை (ஜனவரி 30), நாளை மறுநாள் (ஜனவரி 31) மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில்,

வழக்கமாக இயக்கப்படும் தினசரி பேருந்துகளுடன் கூடுதலாகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் நெரிசலின்றிப் பயணம் செய்ய இந்தச் சிறப்புப் பேருந்து சேவையைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது….

Related Articles

Stay Connected

0FansLike

Latest News