-
மேஷம்: உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.
-
ரிஷபம்: எதிர்பாராத செலவுகள் வரக்கூடும் என்பதால் சிக்கனம் தேவை. குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.
-
மிதுனம்: பொருளாதார நிலை உயரும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு.
-
கடகம்: திடீர் செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் வர வாய்ப்புள்ளது. தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
-
சிம்மம்: துணிச்சலாகச் செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
-
கன்னி: வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
-
துலாம்: (சந்திராஷ்டமம்) மாலை வரை எச்சரிக்கை தேவை. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பணவரவு இருந்தாலும் மன உளைச்சல் ஏற்படலாம்.
-
விருச்சிகம்: மாலைக்கு மேல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் பயணங்களில் கவனம் தேவை. கடன் விவகாரங்களில் தலையிட வேண்டாம். குடும்பத்தில் அமைதி காக்கவும்.
-
தனுசு: எதிர்பாராத தனவரவு உண்டாகும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் மற்றும் தொழிலில் லாபம் காண்பீர்கள்.
-
மகரம்: உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். மனதிற்குப் பிடித்தமான சம்பவங்கள் நடைபெறும். சேமிப்பு உயரும்.
-
கும்பம்: பணிச்சுமை சற்று அதிகரிக்கலாம். அலுவலகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரலாம் என்பதால் கவனம் தேவை. பொறுமை அவசியம்.
-
மீனம்: ஆன்மீகக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தில் சிறுசிறு செலவுகள் வந்தாலும் சமாளிப்பீர்கள். மன நிம்மதி கிடைக்கும்…

