Home லைப் ஸ்டைல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் – “உணவே மருந்து” சொல்லும் முக்கிய ரகசியம்..!!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் – “உணவே மருந்து” சொல்லும் முக்கிய ரகசியம்..!!

இன்று துரித உணவுகளால் நோய்களை நாமே வரவழைத்துக் கொள்கிறோம். இந்நிலையில், அன்றாட உணவில் செய்யும் சிறிய மாற்றங்கள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி என்று நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.முதலாவதாக, காலை எழுந்தவுடன் காபி, டீயைத் தவிர்த்துவிட்டு, மஞ்சள் மற்றும் இஞ்சி கலந்த பானங்களைப் பருக வேண்டும். இது உடலுக்குப் புத்துணர்ச்சி தருவதோடு, கிருமித் தொற்றுகளிலிருந்தும் பாதுகாக்கிறது.

காலை உணவைத் தவிர்க்காமல், இட்லியுடன் கருப்பு கொண்டைக்கடலை சேர்த்துக்கொள்வது உடலுக்குத் தேவையான புரதத்தைத் தரும். முக்கியமாக, உணவில் தாளிப்பதற்குப் பயன்படுத்தும் கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று சாப்பிடுவது அவசியம்.

மேலும், விட்டமின் சி நிறைந்த பழங்களை தினமும் உணவில் சேர்க்க வேண்டும். வாரத்திற்கு மூன்று முறையாவது முருங்கைக்கீரையை சமைத்துச் சாப்பிட்டால், அதிலுள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி நோய்களிலிருந்து பாதுகாக்கும்…

Exit mobile version