Home செய்திகள் ஒரே நாளில் ரூ.9520 உயர்வு – தங்கம் விலை கிடுகிடு..!! நகைப்பிரியர்களுக்குப் பேரிடி..!!

ஒரே நாளில் ரூ.9520 உயர்வு – தங்கம் விலை கிடுகிடு..!! நகைப்பிரியர்களுக்குப் பேரிடி..!!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று காலை யாரும் எதிர்பாராத வகையில் கிடுகிடுவென உயர்ந்தது.இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து பொதுமக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.16,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,34,400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருமணம் மற்றும் சுபகாரியங்களுக்குத் தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்த நடுத்தரக் குடும்பத்தினர், இந்தத் திடீர் விலை உயர்வால் கடும் கலக்கமடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றமே இந்தத் திடீர் விலையேற்றத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது…

Exit mobile version