இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த், தனது 75 வயதிலும் இளம் நடிகர்களுக்குப் போட்டியாக பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்து வருகிறார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள அவர், தற்போது தனது வாழ்க்கை வரலாற்றை (Autobiography) புத்தகமாக எழுதத் தொடங்கியுள்ளார்.இத்தகவலை அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.
பெங்களூரில் சாதாரணப் பேருந்து நடத்துநராக (Conductor) வாழ்க்கையைத் தொடங்கி, சென்னைக்கு வந்து தமிழ் சினிமாவின் ‘சூப்பர் ஸ்டாராக’ உயர்ந்தது வரையிலான அவரது பிரம்மாண்ட பயணம் இதில் இடம்பெறவுள்ளது.குறிப்பாக, இளம் வயதில் அவர் சந்தித்த கஷ்டங்கள், அவமானங்கள் மற்றும் இதுவரை வெளிவராத பல சுவாரஸ்யமான தகவல்களை ரஜினி இதில் பகிர்ந்து வருகிறார்.
மேலும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவர் எப்படித் தன்னைத் தயார்படுத்திக்கொண்டார் என்ற திரை ரகசியங்களும் இதில் இருக்கும் என்பதால், இப்புத்தகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் விண்ணைத் தொட்டுள்ளது…
