Monday, March 2, 2026
No menu items!

வேண்டுமென்றே ரிஸ்க் எடுத்த இந்தியா – சூர்யகுமார் சொன்ன காரணம்..!!

நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி மேற்கொண்டத் திடீர் மாற்றம் குறித்துக் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மனம் திறந்து பேசியுள்ளார். இந்தப் போட்டியில் இந்தியா வெறும் 6 பேட்டர்களுடன் மட்டுமே களமிறங்கியது ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியிருந்தது.இது குறித்து விளக்கமளித்த சூர்யகுமார், “நாங்கள் வேண்டுமென்றே தான் 6 பேட்டர்களுடன் விளையாடினோம்.

200 ரன்கள் போன்ற பெரிய இலக்கைத் துரத்தும்போது, ஆரம்பத்திலேயே 2-3 விக்கெட்டுகளை இழந்தால் அணியின் திறன் எப்படி இருக்கிறது என்பதைப் பரிசோதிக்கவே இந்த முடிவை எடுத்தோம்,” என்று கூறினார்.மேலும், எதிர்வரும் டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும்,

வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். நெருக்கடியான சூழலில் அணியின் பேட்டிங் ஆழத்தைச் சோதிக்கவே இந்த ‘ரிஸ்க்’ எடுக்கப்பட்டதாக அவர் கூறியது கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News