Monday, March 2, 2026
No menu items!

புதிய படங்களே ஓரம் போங்க – 6 நாளில் வசூலில் கெத்து காட்டும் “மங்காத்தா”..!!

தமிழ் சினிமாவின் முக்கிய பிளாக்பஸ்டர் படங்களுள் ஒன்றான அஜித்தின் ‘மங்காத்தா’, ரீ-ரிலீஸிலும் புதிய சரித்திரத்தைப் படைத்து வருகிறது. விநாயக் மகாதேவ் மீண்டும் திரையில் தோன்ற மாட்டாரா என ஏங்கிய ரசிகர்களுக்கு விருந்தாக, கடந்த 23-ம் தேதி இப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியானது.வெளியான முதல் நாளிலிருந்தே திரையரங்குகள் திருவிழா கோலமாக மாறியுள்ளன.

பழைய படம் என்ற சுவடு தெரியாத அளவிற்கு, தற்போது வெளியாகும் புதிய முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக வசூலில் பட்டையைக் கிளப்பி வருகிறது.இந்நிலையில், படம் வெளியாகி 6 நாட்கள் கடந்துள்ள நிலையில், இதன் வசூல் நிலவரம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதன்படி, உலகளவில் இதுவரை ரூ. 20 கோடி வசூல் செய்து இப்படம் சாதனை படைத்துள்ளது. ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ஒரு படம், இவ்வளவு குறுகிய காலத்தில் 20 கோடியைத் தொட்டிருப்பது அஜித்தின் ஸ்டார் பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News