Home அரசியல் விஜய் அதிரடி..!! 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி – பிப்ரவரி 2-ல் வெளியாகும் வேட்பாளர் பட்டியல்.??

விஜய் அதிரடி..!! 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி – பிப்ரவரி 2-ல் வெளியாகும் வேட்பாளர் பட்டியல்.??

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.முதல் தேர்தலிலேயே கட்சியின் உண்மையான பலத்தை நிரூபிக்க விரும்பும் விஜய், மாநிலம் முழுவதும் ‘விசில்’ சின்னத்தைக் களமிறக்கத் திட்டமிட்டுள்ளார்.

இதற்காகத் தொகுதி வாரியாகச் செல்வாக்கு மிக்க நபர்கள் யார், அங்குள்ள முக்கியப் பிரச்சனைகள் என்ன என்பது குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.இதற்கிடையில், வரும் பிப்ரவரி 2-ம் தேதி தவெக-வின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பேர் கொண்ட உத்தேசப் பட்டியல் தயாராகி வருவதாகவும், தகுதியான வேட்பாளர்களை இறுதி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன…

Exit mobile version