Home ஆன்மீகம் திருமண தடை நீங்க வேண்டுமா.?? சிவராத்திரியில் சிவனின் காலடியில் இதை வையுங்க..!!

திருமண தடை நீங்க வேண்டுமா.?? சிவராத்திரியில் சிவனின் காலடியில் இதை வையுங்க..!!

சிவபெருமானுக்கு உகந்த புனித நாளான மகா சிவராத்திரி, வரும் பிப்ரவரி 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. சிவன் – பார்வதி தேவி திருமண நாளாகவும், லிங்க வழிபாடு தோன்றிய நாளாகவும் கருதப்படும் இந்நாளில், விரதமிருந்து வழிபட்டால் கர்மவினைகள் நீங்கும் என்பது ஐதீகம்.பிப்ரவரி 15 மாலை தொடங்கி 16-ம் தேதி காலை வரை அனைத்து சிவாலயங்களிலும் நான்கு கால பூஜைகள் நடைபெறும்.

இந்த ஆண்டு சிவராத்திரியில் திருமணத் தடை உள்ளவர்களுக்குச் சிறப்புப் பரிகாரம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமணம் கைகூடாதவர்கள் மற்றும் கருத்து வேறுபாடால் பிரிந்த தம்பதியினர், தங்கள் கைகளால் மஞ்சளை எடுத்துச் சிவன் – பார்வதி பாதங்களில் வைத்து மனமுருகி வழிபட வேண்டும்.

மேலும், அன்றைய தினம் சிவ மந்திரங்களை உச்சரிப்பதும், குறைந்தது இரண்டு பேருக்காவது அன்னதானம் செய்வதும் ஜாதக தோஷங்களை முற்றிலும் நீக்கும். இந்த எளிய வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்றும், மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்றும் ஆன்மீகப் பெரியோர்கள் தெரிவித்துள்ளனர்…

Exit mobile version