கோடைக்காலம் மட்டுமல்லாது அனைத்து நாட்களிலும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பானமாக மோர் திகழ்கிறது. நம் முன்னோர்கள் விரும்பி அருந்திய மோரில் மறைந்துள்ள மருத்துவ குணங்கள் குறித்துப் பார்க்கலாம்.காரம் அதிகமாகச் சாப்பிட்ட பின் ஏற்படும் வயிற்று எரிச்சலைத் தணிக்க ஒரு டம்ளர் மோர் சிறந்த தீர்வாகும். மோருடன் இஞ்சி, சீரகம் கலந்து குடிப்பது வயிறு உப்புசத்தைச் சரிசெய்து செரிமானத்தை விரைவுபடுத்தும்.
இதிலுள்ள வைட்டமின் பி2 கல்லீரலை நன்றாகச் செயல்பட வைப்பதுடன், உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி உள் உறுப்புகளைச் சுத்திகரிக்கிறது.மிளகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை அரைத்து மோரில் கலந்து குடித்தால் நாள்பட்ட செரிமானக் கோளாறுகள் நீங்கும்.
வெறும் உப்பை மட்டும் கலந்து குடித்து வர மூல நோய் குணமாகும் என்றும், குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை இது கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. சளி பிடிக்கும் உடல்வாகு உள்ளவர்கள், மோரை லேசாகச் சூடுபடுத்தி மஞ்சள் தூள் கலந்து குடித்தால் சளிப் தொல்லையின்றி ஆரோக்கியம் பெறலாம்…

