இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பொன்னியின் செல்வன் – 1’ திரைப்படத்தின் இசைக்காக, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கௌரவிக்கப்பட்டிருப்பது இசை ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதைப் பெறுவது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், “‘பொன்னியின் செல்வன் – 1’ படத்திற்காகச் சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது பெறுவதில் நான் பெருமை கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், தனது இசைக்குத் தக்க அங்கீகாரம் அளித்ததற்காகத் தமிழ்நாடு அரசுக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
தன்னுடன் இணைந்து விருது பெறும் சக கலைஞர்களுக்கும் அவர் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். சோழர்களின் பெருமையை உலகுக்கு உணர்த்திய படத்திற்கு, அரசின் இந்த அங்கீகாரம் மேலும் சிறப்பு சேர்த்துள்ளது…

