கடந்த சில நாட்களாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று யாரும் எதிர்பாராத வகையில் அதிரடியாகச் சரிந்து பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போதே சவரனுக்கு ரூ.4,800 குறைந்திருந்த நிலையில், தற்போது மேலும் ரூ.2,800 குறைந்துள்ளது. ஆக மொத்தம் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7,600 வரை விலை சரிந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.15,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,26,800 ஆகக் குறைந்துள்ளது. உச்சத்தில் இருந்த விலை தற்போது கணிசமாகக் குறைந்துள்ளதால், திருமணம் மற்றும் சுபகாரியங்களுக்குத் தங்கம் வாங்கக் காத்திருந்த நடுத்தர மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்…

