Monday, March 2, 2026
No menu items!

“மரியாதை கிடைக்கவில்லை” – 7 ஆண்டுகளுக்குப் பின் உண்மையை உடைத்த யுவராஜ் சிங்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங், தனது ஓய்வு முடிவு குறித்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்து பேசியுள்ளார். 2011 உலகக் கோப்பை நாயகனான அவர், கிரிக்கெட்டிலிருந்து விடைபெறக் காரணமாக இருந்த வலிமிகுந்த உண்மைகளைப் பகிர்ந்துள்ளார்.”கடைசி காலங்களில் கிரிக்கெட்டை என்னால் ரசித்து விளையாட முடியவில்லை.

அந்த சமயத்தில் எனக்கு யாரும் துணை நிற்கவில்லை, எனக்குரிய மரியாதையும் அளிக்கப்படவில்லை,” என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.மேலும், “நான் யாருக்காக, எதை நிரூபிக்க இதைச் செய்கிறேன் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இது என்னை மனதளவில் மிகவும் பாதித்தது.

அந்த மன உளைச்சலினாலேயே ஓய்வு பெற வேண்டும் என்ற கடினமான முடிவை நான் எடுத்தேன்,” என்று யுவராஜ் விளக்கமளித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டிற்காகத் தனது உயிரையும் துச்சமென மதித்து விளையாடிய ஒரு வீரருக்கு, தகுந்த மரியாதை கிடைக்கவில்லை என்ற இந்தத் தகவல் ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News