Home அரசியல் “மரியாதை தான் முக்கியம்” – கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் வைத்த அதிரடி ட்விஸ்ட்..!!

“மரியாதை தான் முக்கியம்” – கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் வைத்த அதிரடி ட்விஸ்ட்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி விவகாரத்தில் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முக்கிய கருத்தைத் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூட்டணி குறித்துத் தெளிவான விளக்கத்தை அளித்தார்.

“எங்களுக்குரிய மரியாதை எங்கு கிடைக்கிறதோ, அங்குதான் நாங்கள் கூட்டணி அமைப்போம்,” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். மேலும், பெரிய கட்சிகளின் மௌனம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். “ஆளும் கட்சியும் (திமுக), ஆண்ட கட்சியும் (அதிமுக) இன்னும் தங்கள் கூட்டணியை இறுதி செய்யாத நிலையில்,

நாங்கள் மட்டும் இப்போதே ஏன் எங்கள் முடிவைச் சொல்ல வேண்டும்?” என்று அவர் வினவியுள்ளார்.இதன் மூலம், மற்ற கட்சிகளின் நகர்வுகளைக் கவனித்த பிறகே தேமுதிக தனது முடிவை அறிவிக்கும் என்பதையும், கௌரவமான இடங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதையும் அவர் சூசகமாக உணர்த்தியுள்ளார்…

Exit mobile version