Home அரசியல் மீண்டும் அதிமுகவில் இணைப்பா..?? இபிஎஸ் கருத்தை நிராகரித்த ஓ.பி.எஸ் – அரசியல் ட்விஸ்ட்..!!

மீண்டும் அதிமுகவில் இணைப்பா..?? இபிஎஸ் கருத்தை நிராகரித்த ஓ.பி.எஸ் – அரசியல் ட்விஸ்ட்..!!

அதிமுக உள்கட்சி பூசல் தொடர்ந்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்), எடப்பாடி பழனிசாமியின் கருத்து குறித்துத் தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி தரப்பில், “ஓ.பி.எஸ்ஸை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “என்னை மீண்டும் அதிமுகவில் சேர்க்க முடியாது என எடப்பாடி பழனிசாமி கூறியது பழைய செய்தி,” என்று ஓ.பி.எஸ் கூலாகப் பதிலளித்தார்.அவரது இந்த பதில் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் களம் மாறிவரும் சூழலில்,

பழைய அறிக்கைகளுக்கு இப்போது முக்கியத்துவம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக அவரது பேச்சு அமைந்திருந்தது. இதன் மூலம் அதிமுக இணைப்பு விவகாரத்தில் இன்னும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என்பதையே அவர் சூசகமாக உணர்த்தியுள்ளார்…

Exit mobile version