நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் தற்போது உச்சநீதிமன்றத்தை எட்டியுள்ளது. படத்தின் வெளியீடு நெருங்கி வரும் சூழலில், மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) எடுத்துள்ள இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கக் கோரிய தனி நீதிபதியின் உத்தரவை, உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.
இந்தச் சூழலில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, “தங்களது தரப்பு வாதங்களைக் கேட்காமல், தயாரிப்பு நிறுவனத்திற்குச் சாதகமாக எந்த ஒரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது” எனக் கோரி சென்சார் போர்டு தற்போது கேவியட் (Caveat) மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
இதனால், தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தாலும், சென்சார் போர்டின் விளக்கத்தைக் கேட்ட பிறகே நீதிமன்றம் முடிவெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது படத்தின் வெளியீட்டுத் திட்டத்தில் மேலும் தாமதத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது…
