Home சினிமா அபிஷன் இயக்கி நடிக்கும் ‘வித் லவ்’ பட ட்ரெய்லர் எப்படி இருக்கிறது.?

அபிஷன் இயக்கி நடிக்கும் ‘வித் லவ்’ பட ட்ரெய்லர் எப்படி இருக்கிறது.?

யூடியூப்பில் தனது இயல்பான நகைச்சுவை மற்றும் குடும்பப் பாங்கான உள்ளடக்கத்தின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் அபிஷன். தற்போது தனது நீண்ட நாள் கனவான சினிமா பயணத்தை

‘வித் லவ்’ படத்தின் மூலம் தொடங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு அவரே கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. வெளியாகியுள்ள ட்ரெய்லரை பார்க்கும்போது, இது ஒரு மென்மையான காதல் கதையாகவும்,

அதே சமயம் இன்றைய இளைஞர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மற்றும்

பின்னணி இசை ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஒரு யூடியூப் படைப்பாளியாக இருந்து, இயக்குநராகவும் நடிகராகவும் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ள அபிஷனுக்கு,

திரைத்துறையினரும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ள இந்த ட்ரெய்லர், படம் எப்போது வெளியாகும் என்ற ஆவலைத் தூண்டியுள்ளது…

Exit mobile version