Home லைப் ஸ்டைல் தூக்கி எறியாதீங்க.. டீ வடிகட்டி ஓட்டையை அடைத்திருக்கும் கறையை விரட்ட எளிய வழி..!!

தூக்கி எறியாதீங்க.. டீ வடிகட்டி ஓட்டையை அடைத்திருக்கும் கறையை விரட்ட எளிய வழி..!!

தினமும் காலையிலும், மாலையிலும் டீ போடுவது நம் வீடுகளில் தவிர்க்க முடியாத வழக்கம். ஆனால், தொடர்ந்து பயன்படுத்தப்படும் டீ வடிகட்டிகள் (Tea Filter) நாளடைவில் கறுப்பு நிறத்தில் கறை படிந்து, அதன் துளைகள் அடைத்துக் கொள்ளும்.

சோப்பு போட்டு எவ்வளவு தேய்த்தாலும் இந்த விடாப்பிடியான கறைகள் போகாது. பலரும் அழுக்கு நீங்காததால் பழைய வடிகட்டியை தூக்கி எறிந்துவிட்டு புதியதை வாங்குவார்கள்.

ஆனால், உங்கள் பழைய டீ வடிகட்டியைத் தூக்கி எறியத் தேவையில்லை. கடைகளில் கிடைக்கும் ரசாயனங்கள் எதுவும் இல்லாமல், வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அதை நொடியில் பளிச்சென்று மாற்ற முடியும். இதோ அதற்கான எளிய குறிப்பு:

பெரும்பாலும் வீடுகளில் எவர்சில்வர் (Stainless Steel) வடிகட்டிகளையே பயன்படுத்துகிறோம். இதற்கு ‘தீ’ ஒன்றே சிறந்த தீர்வு.

  1. முதலில் கேஸ் ஸ்டவ்வை பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.

  2. அழுக்கு படிந்த உங்கள் ஸ்டீல் வடிகட்டியை நேரடியாக அந்த நெருப்பில் சிறிது நேரம் காட்டுங்கள். (கையில் சூடு படாமல் இருக்க இடுக்கி (Tongs) பயன்படுத்துவது நல்லது).

  3. வடிகட்டியில் அடைத்திருக்கும் பழைய டீ தூள் துகள்கள் நெருப்பில் கருகி சாம்பலாகிவிடும்.

  4. நன்கு கருகிய பிறகு, ஸ்டவ்வை அணைத்துவிட்டு வடிகட்டியைத் தட்டி விடுங்கள். கறைகள் உதிர்வதைக் காணலாம்.

  5. பிறகு வழக்கம் போல் பாத்திரம் கழுவும் சோப்பு அல்லது லிக்விட் பயன்படுத்தி லேசாகத் தேய்த்துக் கழுவினால் போதும். கடையில் புதிதாக வாங்கியது போல உங்கள் டீ ஃபில்டர் ஜொலிக்கும்.

பிளாஸ்டிக் வடிகட்டி வைத்திருப்பவர்கள் என்ன செய்வது? பிளாஸ்டிக் வடிகட்டியை நெருப்பில் காட்டக்கூடாது. அதற்குப் பதிலாக, சுடுநீரில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு அல்லது வினிகர் கலந்து, அதில் வடிகட்டியை 15 நிமிடம் ஊற வைத்து பிரஷ்ஷால் தேய்த்தால் கறைகள் நீங்கிவிடும்.

Exit mobile version