நடிகர் விஜய்யிடம் தற்போது இருக்கும் இளைஞர் பட்டாளம் என்பது, அவரை வெற்றி பெற வைக்கக்கூடிய அல்லது அவரை முதல்வராக்கக் கூடிய அரசியல் பட்டாளம் அல்ல. அவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமே.
விஜய்யால் தனித்து நின்று அரசியலில் எதையும் சாதிக்க முடியாது. அவர் மற்றொரு கூட்டணியில் இணைந்து செயல்பட்டால் மட்டுமே அரசியலில் பயன்பெற முயற்சிக்க முடியும். மேலும், அவர் பேசுகையில்,
“விசில் என்பது அரசியல் கட்சிகளுக்கான சின்னம் அல்ல; அது தொண்டர்களுக்கான சின்னமும் அல்ல. அது முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான சின்னம். விசிலடிக்கிற கூட்டம் வேறு, வாக்களிக்கிற கூட்டம் வேறு. இதனைப் புரிந்து கொண்டு அவர் பார்த்து அரசியல் செய்ய வேண்டும்” என்று டாக்டர்
தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ரசிகர் கூட்டத்தை நம்பி அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய்க்கு, அது ஓட்டுகளாக மாறுமா என்பது சந்தேகமே என்ற ரீதியில் தமிழிசையின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது…

