Monday, March 2, 2026
No menu items!

“தீயில் எரிந்தது சட்டம்-ஒழுங்குதான்.. கடலூர் விவசாயி படுகொலைக்கு இபிஎஸ் கண்டனம்..!!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே விவசாயி ஒருவர் நடுரோட்டில் வழிமறித்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி

கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது,

காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை வழிமறித்துள்ளது. பின்னர், அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொடூரமான முறையில் எரித்துக் கொலை செய்துள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் குறித்து எதிர்க்கட்சித்

தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயி ராஜேந்திரன் காரில் வழிமறிக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொடூரராக எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழக மக்களின்

நெஞ்சை உறைய வைத்துள்ளது,” என்று வேதனை தெரிவித்துள்ளார். மேலும், அவர் தமிழக அரசின் சட்டம்-ஒழுங்கு நிலையை கடுமையாகச் சாடியுள்ளார். “தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டுமல்ல,

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும்தான்,” என்று குறிப்பிட்டு, மாநிலத்தில் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News