Monday, March 2, 2026
No menu items!

வீட்டிலிருந்தே ஆதார் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி.? முழு விவரம் உள்ளே..!!

ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை மாற்றுவதற்கு அல்லது புதிதாக இணைப்பதற்கு இனி மக்கள் ஆதார் மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்திய தபால் துறையும், ஆதார் ஆணையமும் (UIDAI) இணைந்து, பொதுமக்கள்

தங்கள் வீட்டிலிருந்தபடியே மொபைல் எண்ணை மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளன. இதுவரை, ஆதார் அட்டையில் பெயர், முகவரி போன்ற திருத்தங்களை ஆன்லைனில் செய்ய முடிந்தாலும், மொபைல் எண்ணை இணைப்பதற்கு

பயோமெட்ரிக் (கைரேகை) பதிவு அவசியம் என்பதால், மக்கள் இ-சேவை மையங்களுக்கோ அல்லது தாலுகா அலுவலகங்களுக்கோ நேரில் செல்ல வேண்டியிருந்தது. இதனால் முதியவர்கள், கிராமப்புற மக்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.

இந்த புதிய சேவையின் சிறப்பம்சங்கள்:

  • வீடு தேடி வரும் சேவை: இந்திய தபால் வங்கியின் (India Post Payments Bank – IPPB) மூலம், தபால்காரர்கள் (Postmen) மற்றும் கிராமிய அஞ்சல் சேவகர்கள் (Gramin Dak Sevaks) வீடு தேடி வந்து இந்த சேவையை வழங்குவார்கள்.

  • நவீன தொழில்நுட்பம்: இதற்காக தபால்காரர்களுக்கு ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

  • எளிய நடைமுறை: பொதுமக்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் இந்த சேவையைக் கோரலாம். இதற்கென பிரத்யேக கட்டணம் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது (பொதுவாக ரூ.50).

  • குழந்தைகளுக்கான ஆதார்: மொபைல் எண் மாற்றம் மட்டுமல்லாது, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான புதிய ஆதார் பதிவையும் இந்த சேவையின் மூலம் வீட்டிலிருந்தே செய்து கொள்ளலாம்.

“டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், வங்கிச் சேவைகளைத் தொடர்ந்து தற்போது ஆதார் சேவைகளும் சாமானிய மக்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு செல்லப்பட்டுள்ளது

ஒரு பெரிய வரப்பிரசாதம்,” என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டத்தின் மூலம், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் மிகுந்த பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News