Home செய்திகள் கிலோவுக்கு ரூ. 55,000 குறைந்த வெள்ளி விலை.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!!

கிலோவுக்கு ரூ. 55,000 குறைந்த வெள்ளி விலை.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட வெள்ளி விலை, இன்று யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. நகைப்பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில், ஒரே நாளில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 55,000 குறைந்துள்ளது.

இந்த அதிரடி விலைக்குறைப்பால், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 3,50,000 என்ற நிலைக்கு வந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் பொருளாதாரச் சூழல் காரணமாக இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளதாக சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.

தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வரும் நிலையில், வெள்ளியின் இந்த திடீர் விலை வீழ்ச்சி இல்லத்தரசிகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் வாங்குவோருக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண சீசன் தொடங்கி உள்ள நிலையில், இந்த விலை குறைவு விற்பனையை அதிகரிக்கும் என நகைக்கடை உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்…

Exit mobile version