தமிழகத்தில் இதுவரை செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் ஒரு தொடக்கமே தவிர, இன்னும் ஏராளமான “கனவுத் திட்டங்கள்” வரிசையில் காத்திருக்கின்றன என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், “திமுக அரசு பதவியேற்றது முதல் மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தேர்தல் அறிக்கையில் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்.
ஆனால், சொன்னதை மட்டும் செய்வது எங்கள் நோக்கமல்ல. சொல்லாத பல நல்ல திட்டங்களையும் நாங்கள் இந்த மூன்றாண்டு காலத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.மேலும் அவர் பேசுகையில், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும், தமிழகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும் பல புதிய கனவுத் திட்டங்களை அரசு தீட்டி வருவதாகவும்,
அவை ஒவ்வொன்றாக அடுத்தடுத்த கட்டங்களில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்தார். அரசின் செயல்பாடுகளை மக்கள் முழுமையாக ஆதரிப்பதாகத் தெரிவித்த அவர், தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதே தனது இலக்கு என்பதையும் சுட்டிக்காட்டினார்…
