Home சினிமா “என்னை ஏளனம் செய்பவர்களுக்கு விரைவில் பதிலடி கொடுப்பேன்” – “வாட்டர் மிலன் ஸ்டார்” திவாகர் ஆவேசம்..!!

“என்னை ஏளனம் செய்பவர்களுக்கு விரைவில் பதிலடி கொடுப்பேன்” – “வாட்டர் மிலன் ஸ்டார்” திவாகர் ஆவேசம்..!!

சமூக வலைதளங்களில் ‘வாட்டர் மிலன் ஸ்டார்’ என அறியப்படும் திவாகர், இன்று சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சினிமாவில் தான் ஒரு ஹீரோவாக உருவெடுக்க வேண்டும் என்பதே தனது தீராத ஆசை எனத் தெரிவித்தார். இன்ஸ்டாகிராம் மற்றும் பிக்பாஸ் சீசன் 9 மூலம் பிரபலமான இவர், தன்னை ஒரு “நடிப்பு அரக்கன்” என்று குறிப்பிட்டதோடு,

தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதையும் வருத்தத்துடன் பதிவு செய்தார். தன்னை ஒரு ‘காமெடி பீஸாக’ சித்தரிக்க சிலர் முயற்சிப்பதாகவும், அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆக்ஷன், ரொமான்ஸ் என அனைத்து பரிமாணங்களிலும் நடித்துக் காட்டத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தன் மீதான நெகட்டிவ் ட்ரோல்களைப் பற்றி கவலைப்படவில்லை எனத் தெரிவித்த அவர், சிறந்த நடிகராக உலக அளவில் உயரப் போவதாகத் தன்னம்பிக்கையுடன் பேசினார். தனது திரையுலகக் கனவு நிறைவேறவே வடிவுடையம்மன் கோவிலுக்கு வந்து வேண்டிக் கொண்டதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்…

Exit mobile version