நேற்றைய நிலவரப்படி உச்சத்தில் இருந்த வெள்ளி விலை, இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.30,000 வரை சரிந்துள்ளது. இந்த அதிரடி வீழ்ச்சியால், ஒரு கிலோ வெள்ளியின் விலை தற்போது ரூ.3,20,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியபோது, ஒரு கிராமுக்கு ரூ.55 வரை குறைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, தற்போது கிராமுக்கு மேலும் ரூ.30 குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் போக்கு காரணமாக இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். கடந்த சில வாரங்களாக ஏறுமுகத்தில் இருந்த வெள்ளி விலை, திடீரென ஒரு கிலோவுக்கு ரூ.30,000 வரை குறைந்திருப்பது நகை வாங்குவோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமண சீசன் நெருங்கி வரும் வேளையில், வெள்ளியின் இந்த விலை வீழ்ச்சி நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த விலை சரிவு இன்னும் சில நாட்களுக்கு நீடிக்குமா அல்லது மீண்டும் உயருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…

