Home அரசியல் மாம்பழச் சின்னம் ஒதுக்கீடு – தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து ராமதாஸ் வழக்கு..!!

மாம்பழச் சின்னம் ஒதுக்கீடு – தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து ராமதாஸ் வழக்கு..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் சின்னம் தொடர்பாக அந்த கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.சமீபத்தில், அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு தேர்தல் ஆணையம் ‘மாம்பழம்’ சின்னத்தை ஒதுக்கி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் அந்த குறிப்பிட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி ராமதாஸ் அவர்கள் தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளார். பா.ம.க. நிறுவனர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில்,

சின்னம் ஒதுக்கீட்டில் உள்ள சில நடைமுறைச் சிக்கல்கள் அல்லது ஆட்சேபனைகள் காரணமாக இந்தத் தடையைக் கோரியுள்ளதாகத் தெரிகிறது.இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது. இதற்கான விசாரணையானது நாளை மறுநாள் நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கட்சியின் அடையாளமாகப் பார்க்கப்படும் மாம்பழச் சின்னம் குறித்து நிறுவனர் ராமதாஸ் அவர்களே வழக்குத் தொடர்ந்துள்ளது,தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த வழக்கின் தீர்ப்பு, வரவிருக்கும் தேர்தலில் பா.ம.க-வின் வியூகங்களில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…

Exit mobile version